ADDED : ஜன 08, 2025 04:58 AM

துபாய் : துபாயில், கார் ரேஸ் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில், நடிகர் அஜித் குமார் காயமின்றி தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் நடைபெறும், '24 எச் மற்றும் ஐரோப்பிய 24 எச் சாம்பியன்ஷிப் கார் ரேஸ்' போட்டிகளில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கிறார். இந்நிலையில், போட்டிக்கு முன் நடந்த கார் ரேஸ் பயிற்சியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக, அவர் ஓட்டிய ரேஸ் கார் விபத்துக்குள்ளாகி, அருகே இருந்த தடுப்புகள் மீது மோதி சுற்றி சுழன்று நின்றது. இதில், காரின் முன்பக்கம் முற்றிலும் சேதமானது. எனினும், அந்த காரில் இருந்து காயம் ஏதுமின்றி அஜித் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.