Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/லிவர்பூல் வெற்றி அணிவகுப்பில் அதிவேக கார் புகுந்ததில் 50 பேர் காயம்; பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் கண்டனம்

லிவர்பூல் வெற்றி அணிவகுப்பில் அதிவேக கார் புகுந்ததில் 50 பேர் காயம்; பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் கண்டனம்

லிவர்பூல் வெற்றி அணிவகுப்பில் அதிவேக கார் புகுந்ததில் 50 பேர் காயம்; பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் கண்டனம்

லிவர்பூல் வெற்றி அணிவகுப்பில் அதிவேக கார் புகுந்ததில் 50 பேர் காயம்; பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் கண்டனம்

UPDATED : மே 27, 2025 12:49 PMADDED : மே 27, 2025 07:23 AM


Google News
Latest Tamil News
லண்டன்: லிவர்பூல் நகரில் நடந்த வெற்றி அணிவகுப்பின் போது மக்கள் மீது கார் மோதியதில் 50 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 53 வயது பிரிட்டிஷ் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி நடந்தது. இதில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இந்த அணியினர் லிவர்பூல் நகரில் வெற்றி அணிவகுப்பு நடந்தினர். இந்த கூட்டத்திற்குள் ஒரு கார் மோதியதில் 50 பேர் காயம் அடைந்தனர்.

இதில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 53 வயது பிரிட்டிஷ் நபர் கைது செய்யப்பட்டனர்.

கார் நின்றதும் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஜன்னல்களை உடைத்தனர். கார் டிரைவரை மக்கள் தாக்க முயற்சி செய்த போது போலீசார் தடுத்து நிறுத்தனர். இந்த சம்பவம் பயங்கரமானது என பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் ஸ்டாமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: லிவர்பூலில் நடந்த தாக்குதல் மிகவும் கொடூரமானது. காயமடைந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆதரவாக இருப்போம். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்திற்கு விரைவாகவும், தொடர்ந்தும் செயல்பட்ட போலீசார் அவசர சேவைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

சம்பவம் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து எனக்குத் தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. மேலும் போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us