திடீர் வெள்ளத்தில் 11 பேர் பலி; 13 பேர் மாயம்
திடீர் வெள்ளத்தில் 11 பேர் பலி; 13 பேர் மாயம்
திடீர் வெள்ளத்தில் 11 பேர் பலி; 13 பேர் மாயம்
ADDED : செப் 11, 2025 02:28 AM
டென்பசார்: இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட திடீர் மழை வெள்ளத்தில் சிக்கி, 11 பேர் பலியாகினர்; 13 பேரைக் காணவில்லை.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு நுசா தெங்காரா மாகாணம் மற்றும் பாலி தீவுகளில் நேற்று திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில் நுசா தெங்கரா மாகாணத்தில் ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, ஐந்து பேரைக் காணவில்லை.
பாலியில், எட்டு உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். அதே நேரத்தில், எட்டு பேர் காணவில்லை.