Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ லெபனானில் பதற்றம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

லெபனானில் பதற்றம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

லெபனானில் பதற்றம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

லெபனானில் பதற்றம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

UPDATED : ஜூலை 30, 2024 05:52 AMADDED : ஜூலை 30, 2024 01:15 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

துபாய், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023 அக்., 8 முதல், எல்லையில் மோதல் நீடித்து வருகிறது.

கடந்த 27ல், இஸ்ரேல் மீது ஹெஸ்பொல்லா நடத்திய ராக்கெட் தாக்குதலில், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், லெபனானில் உள்ள நம் துாதரகம் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:

பிராந்தியத்தின் சமீபத்திய நடவடிக்கைகளை கருதி, லெபனானில் உள்ள அனைத்து இந்தியர்களும், அந்நாட்டுக்கு செல்ல திட்டமிடுபவர்களும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

பெய்ரூட்டில் உள்ள இந்திய துாதரகத்துடன், தங்களது மின்னஞ்சல் வாயிலாக தொடர்பில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். அவசரத்துக்கு, cons.beirut@mea.gov அல்லது +961 7686 0128 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us