கொரோனா உடல்கள் எரிப்புக்கு மன்னிப்பு கேட்டது இலங்கை
கொரோனா உடல்கள் எரிப்புக்கு மன்னிப்பு கேட்டது இலங்கை
கொரோனா உடல்கள் எரிப்புக்கு மன்னிப்பு கேட்டது இலங்கை
ADDED : ஜூலை 24, 2024 01:30 AM
கொழும்பு, கொரோனா பேரிடர் காலங்களில் முஸ்லிம் உட்பட பல்வேறு சமுதாய மக்கள் இறந்த நிலையில், அவர்களின் உடல்களை வலுக்கட்டாயமாக எரித்ததற்கு இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
உலகம் முழுதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவியது. இதில், பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதன் காரணமாக, பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு உட்பட ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதேபோல் நம் அண்டை நாடான இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் நபர்களின் உடலை, உடனே எரிக்கும் நடைமுறையை கட்டாயப்படுத்தியது.
முஸ்லிம்களின் வழக்கப்படி உடல்களை எரிப்பது பாவச்செயலாக கருதப்படுகிறது. ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களை வலுக்கட்டாயமாக எரிக்குமாறு அப்போதைய இலங்கை அரசு உத்தரவிட்டது.
இது, முஸ்லிம் உட்பட பல்வேறு சமூகத்தினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுபோல், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 276 பேரின் உடல்கள் எரிக்கப்பட்டன.
இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தின்போது, கொரோனா காலத்தில் முஸ்லிம் உட்பட ஏராளமான மதத்தினரின் உடல்களை வலுக்கட்டாயமாக எரித்த சம்பவங்களுக்கு அனைத்து மதத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற பேரிடர் காலங்களில் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை புதைப்பதா அல்லது எரிப்பதா என்பது குறித்து அவரவரின் மத சம்பிரதாயங்களின்படி இனி நடவடிக்கை எடுப்பது தொடர்பான சட்டத்திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுபோன்ற சர்ச்சைகள் இனி நிகழாத வகையில், இதை சட்டமாக்கவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.