டிரம்ப்பிற்கு எதிரான ரகசிய ஆவணங்கள் பதுக்கிய வழக்கு தள்ளுபடி
டிரம்ப்பிற்கு எதிரான ரகசிய ஆவணங்கள் பதுக்கிய வழக்கு தள்ளுபடி
டிரம்ப்பிற்கு எதிரான ரகசிய ஆவணங்கள் பதுக்கிய வழக்கு தள்ளுபடி
ADDED : ஜூலை 15, 2024 10:10 PM

புளோரிடா: அரசு ரகசிய ஆவணங்களை தனது பங்களாவில் பதுக்கி வைத்திருந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை கோர்ட் தள்ளுபடி செய்தது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப்,76, இவர் தன் பதவி காலத்தின் போது அரசின் முக்கிய ரகசிய ஆவணங்களை, தன் தனிப்பட்ட பங்களாவில், குளியலறை உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைத்திருந்ததாக, புகைப்பட ஆதாரங்கள் வெளியாகின. . இது தொடர்பாக புளோரிடாவில் உள்ள அவருடைய வீட்டில், கடந்தாண்டு சோதனை நடத்தப்பட்டு, முக்கிய ஆவணங்கள் மீட்கப்பட்டன.
டொனால்டு டிரம்ப் மீது, ஏழு பிரிவுகளில், 37 குற்றங்கள் மியாமி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில், டொனால்டு டிரம்ப் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில 2023 ஜூன்.13 மியாமி கோர்ட்டில் டிரம்ப் ஆஜரானார். அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தார். எனினும் கோர்ட் வாளாகத்திலேயே கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக அரசு சார்பில் ஜாக் ஸ்மித் என்ற சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். இன்று நடந்த விசாரணையில் ஜாக் ஸ்மித் நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி அய்லின் கேனான் தள்ளுபடி செய்தார்.