பிரிட்டன் மன்னர் உருவத்துடன் புது கரன்சிகள் வெளியீடு
பிரிட்டன் மன்னர் உருவத்துடன் புது கரன்சிகள் வெளியீடு
பிரிட்டன் மன்னர் உருவத்துடன் புது கரன்சிகள் வெளியீடு
ADDED : ஜூன் 07, 2024 02:20 AM

லண்டன்: பிரிட்டனில் மன்னர் மூன்றாம் சார்லஸ் உருவத்துடன் கூடிய 4 வகை கரன்சிகள் புழக்கத்திற்கு வந்தன. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின் அவரது மகனான சார்லஸ், பிரிட்டன் மன்னராக 2023 மே மாதம் முடிசூட்டிக்கொண்டார்.
இந்நிகழ்வையொட்டி மூன்றாம் சார்லஸ் உருவம் பொறித்த நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டன.
இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் உருவத்துடன் கூடிய 5,10,20 மற்றும் 50 ஆகிய மதிப்புள்ள 4 வகையான கரன்சி நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது. இதனை பிரிட்டன் வங்கி வெளியிட்டது.