ஆன்லைனில் ஆர்டர் செய்த பார்சலில் பல்லி
ஆன்லைனில் ஆர்டர் செய்த பார்சலில் பல்லி
ஆன்லைனில் ஆர்டர் செய்த பார்சலில் பல்லி
ADDED : ஜூலை 25, 2024 01:45 AM

கொலம்பியாவில் பெண் ஒருவர் 'அமேசான்' செயலி வாயிலாக, 'ஆர்டர்' செய்து பெற்ற, 'பார்சலுக்குள் பல்லி உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
கொல்பியாவைச் சேர்ந்த சோபியா செரானே என்ற பெண் தனது வீட்டிற்கு ஏர் பிரேயர் எனப்படும் மின் அடுப்பு ஒன்றை அமேசான் வாயிலாக ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.
அதன்படி வீ்ட்டிற்கு பார்சல் வந்தது. அதனை பிரித்து பார்த்த போது ஏர் பிரேயருடன் , ஸ்பானிஷ் ராக் என்ற இன பல்லி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை புகைப்படம் வீடியோவாக எடுத்து ‛எக்ஸ் '' தளத்தில் பதிவேற்றினார். அது வைரலாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.