ADDED : ஜூலை 27, 2024 07:37 PM

வாஷிங்டன் : ஒவ்வொரு வாக்குகளையும் பெற கடுமையாக உழைப்பேன்
என வேட்புமனு தாக்கல் செய்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்
தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், நவ., 5ல் அதிபர் தேர்தல்
நடக்கிறது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில், போட்டியிட்ட அதிபர் ஜோ
பைடன், 81, வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வரும்
நிலையில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என, சமீபத்தில் அறிவித்தார்.
இதையடுத்து துணை அதிபரான கமலா ஹாரிஸ், 58 அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு அளித்துள்ளார்.
இதையடுத்து
அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்த கமலா
ஹாரிஸ். வேட்பு மனுவில் கையெழுத்திடும் புகைப்படத்ததை ‛எக்ஸ்' தளத்தில்
வெளியிட்டுள்ளார்.
அதில், ஒவ்வொரு வாக்கை பெறுவதற்காக கடுமையாக உழைப்பேன். வரும் நவம்பரில் நம் மக்கள் சக்தி வெற்றி பெறும் என்றார்.