புடின் - கிம் காரில் 'ஜாலி ரவுண்ட்'
புடின் - கிம் காரில் 'ஜாலி ரவுண்ட்'
புடின் - கிம் காரில் 'ஜாலி ரவுண்ட்'
ADDED : ஜூன் 22, 2024 12:42 AM

பியாங்யாங், ரஷ்ய அதிபர் புடின், புற்றுநோய் மற்றும் நரம்பு தளர்ச்சியால் அவதிப்படுகிறார் என, அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் செய்தி பரப்பி வந்த நிலையில், வடகொரிய அதிபருடன் உற்சாகமாக அரட்டை அடித்தபடி அவர் கார் ஓட்டிச் சென்ற, 'வீடியோ' தற்போது வெளியாகி இருக்கிறது.
வீடியோ
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கிழக்காசிய நாடான வடகொரியாவுக்கு சமீபத்தில் சென்றார். அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் பயன்படுத்தி வரும், 'ஆரஸ் லிமோசின்' சொகுசு காரை கிம் ஜாங்குக்கு பரிசளித்தார்.
இரு நாட்டு அதிபர்களும் அந்த காரில் உற்சாகமாக வலம் வரும் வீடியோ வெளியாகி உள்ளது. கிம் ஜாங்கை அருகில் அமர வைத்து, ரஷ்ய அதிபர் புடின் கார் ஓட்டியபடி அவருடன் அரட்டை அடித்து சிரிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. ஒரு கட்டத்தில், புடினை அருகில் அமர வைத்து, வடகொரிய அதிபர் கார் ஓட்டினார்.
ஆதரவு
புடினுக்கு நரம்பு தளர்ச்சியால் கை நடுங்குகிறது, அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என பல்வேறு விதமான வதந்திகளையும் அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் அடிக்கடி பரப்பி வருகின்றன.
இந்நிலையில், புடின் - கிம் கார் பயண வீடியோ அமெரிக்க ஊடகங்களை வாயடைக்க செய்துள்ளது.