ஜிம்பாப்வேக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா
ஜிம்பாப்வேக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா
ஜிம்பாப்வேக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா
ADDED : ஜூலை 13, 2024 07:56 PM

ஜிம்பாப்வேக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வென்றது. முன்னதாக 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராஸா அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.153 ரன்களை இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 15.2 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது.
இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 58 ரன்களும், ஜெய்ஸ்வால் 93 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.