தென் ஆப்ரிக்க அதிபராக சிரில் ராமபோசா மீண்டும் தேர்வு
தென் ஆப்ரிக்க அதிபராக சிரில் ராமபோசா மீண்டும் தேர்வு
தென் ஆப்ரிக்க அதிபராக சிரில் ராமபோசா மீண்டும் தேர்வு
ADDED : ஜூன் 16, 2024 02:27 AM

ஜோகன்னஸ்பர்க், தென் ஆப்ரிக்காவின் அதிபராக சிரில் ராமபோசா, 71, இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் அதிபர் சிரில் ராமபோசா தலைமையிலான ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அந்நாட்டின் அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில், ஆளுங்கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு சிரில் ராமபோசா மீண்டும் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து, பொருளாதார சுதந்திர போராளிகள் கட்சி சார்பில் ஜூலியஸ் மாலேமா போட்டியிட்டார்.
அந்நாட்டு சட்டப்படி, பார்லிமென்டில் பெரும்பான்மை பெறும் நபரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். இதன்படி நடந்த ஓட்டெடுப்பில், சிரில் ராமபோசாவுக்கு 283 ஓட்டுகளும், மாலேமாவுக்கு 44 ஓட்டுகளும் கிடைத்தன.
எனினும், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க, 50 சதவீதத்துக்கும் மேல் ஓட்டுகள் பெற வேண்டும். ஆனால், சிரில் ராமபோசா தலைமையிலான கட்சி 40 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்றது.
இதையடுத்து, ஆளுங்கட்சியான ஆப்ரிக்கன் தேசிய காங்கிரஸ், ஜனநாயக கூட்டமைப்பு மற்றும் இதர சிறு கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இதன் வாயிலாக, தென் ஆப்ரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.