இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் ஈரான் தலைவர் கொமேனி உத்தரவு
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் ஈரான் தலைவர் கொமேனி உத்தரவு
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் ஈரான் தலைவர் கொமேனி உத்தரவு
ADDED : ஆக 02, 2024 12:22 AM

டெஹ்ரான்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த, ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கொமேனி உத்தரவிட்டுள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் -- ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
இதில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பில் பங்கேற்க, ஹமாஸ் படையின் பிரதான தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஹனியே ஈரான் வந்தார். வந்த இடத்தில், இஸ்ரேல் படையினரின் ரகசிய தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.
இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதல் நடத்தும்படி, தங்கள் ராணுவத்துக்கு ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கொமேனி நேற்று உத்தரவிட்டார்.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதற்கிடையே, ஈரான் பல்கலையில் வைக்கப்பட்டிருந்த இஸ்மாயில் ஹனியேவின் உடலுக்கு, ஈரான் உயர் தலைவர் கொமேனி, புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியான் ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.