பாரிஸ் ஒலிம்பிக்: பி.வி.சிந்து தோல்வி
பாரிஸ் ஒலிம்பிக்: பி.வி.சிந்து தோல்வி
பாரிஸ் ஒலிம்பிக்: பி.வி.சிந்து தோல்வி
UPDATED : ஆக 02, 2024 05:45 PM
ADDED : ஆக 01, 2024 11:31 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பாட்மின்டனில் இந்தியாவின் சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.
நேற்று(ஆக.01) பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோ மோதினர். ரியோ (வெள்ளி, 2016), டோக்கியோ (வெண்கலம், 2021) ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, பாரிசிலும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் செட்டை 19-21 என இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 14-21 எனக் கோட்டைவிட்டார். முடிவில் சிந்து 19-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் 'ஹாட்ரிக்' பதக்கம் வெல்லும் சிந்துவின் கனவு தகர்ந்தது.