காங்கோவில் படகு கவிழ்ந்து 86 பேர் பலி
காங்கோவில் படகு கவிழ்ந்து 86 பேர் பலி
காங்கோவில் படகு கவிழ்ந்து 86 பேர் பலி
ADDED : ஜூன் 13, 2024 01:47 AM
கின்ஷகாசா, காங்கோ நாட்டில் 270 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 86 பேர் பலியாயினர்.
ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசின் மைண்டோம்பே மாகாணத்தில் குவா ஆறு செல்கிறது. அப்பகுதி மக்கள் தலைநகர் கின்ஷகாசா செல்வதற்கு இந்த ஆற்றில் படகு போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி 270 பேர் நாட்டு படகு வாயிலாக இந்த ஆற்றின் வழியே கின்ஷகாசா நகருக்கு பயணித்தனர். அதிக பயணியரை ஏற்றிச் சென்றதால் என்ஜின் பழுதாகி தத்தளித்த படகு, ஆற்றின் கரையில் மோதி உடைந்தது.
இதனால், படகில் இருந்த அனைவரும் நீருக்குள் மூழ்கினர். அதில் 86 பயணியர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். 185 பேர் ஆற்றில் இருந்து நீந்தி கரைக்கு வந்து உயிர் தப்பினர்.
காங்கோவில் சாலை வசதி குறைவாக இருப்பதால், மக்கள் ஆறுகளின் வழியாக செல்லும் படகு போக்குவரத்தை நம்பி உள்ளனர். படகில் விதிகளை மீறி அதிகம் பேரை ஏற்றிச் செல்வதால், அங்கு படகு கவிழும் விபத்து அடிக்கடி நடக்கிறது.