ADDED : ஜூன் 26, 2025 12:49 AM
வேலுார்:ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், ஐந்தாண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசிக்கும் நபர்களுக்கு, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்குவதன் அடையாளமாக, 12 பேருக்கு பட்டாக்களை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் வேலுாரில் நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது, காட்பாடி அடுத்த சேர்க்காடு கிராமத்தை சேர்ந்த பெண் பொற்செல்வி, தான் வறுமை சூழலில் கஷ்டப்படுவதாகவும், தனக்கு, இரு பெண் குழந்தை இருப்பதாகவும், தனக்கு ஏதேனும் ஒரு அரசு பணி வழங்கவும் மனு அளித்தார்.
மனுவை பெற்ற முதல்வர், சில மணி நேரங்களில் அவருக்கு, 17,000 ரூபாய் சம்பளத்தில், காட்பாடி அன்னை சத்யா காப்பக விடுதி காவலருக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.
மனு அளித்த சில மணி நேரங்களில், பணி நியமன ஆணை கிடைத்ததால், அதை பெற்ற பொற்செல்வி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.