/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உரிமம் ரத்து ஆலையில் பட்டாசு தயாரிப்பு; கைது 1 உரிமம் ரத்து ஆலையில் பட்டாசு தயாரிப்பு; கைது 1
உரிமம் ரத்து ஆலையில் பட்டாசு தயாரிப்பு; கைது 1
உரிமம் ரத்து ஆலையில் பட்டாசு தயாரிப்பு; கைது 1
உரிமம் ரத்து ஆலையில் பட்டாசு தயாரிப்பு; கைது 1
ADDED : ஜூன் 26, 2025 12:49 AM
சாத்துார்: வெம்பக்கோட்டை அருகே நடுச்சத்திரத்தில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர் தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.
விஜயகரிசல் குளத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி இவருக்கு சொந்தமான எம்.பி.பட்டாசு தொழிற்சாலை நடுச்சத்திரத்தில் உள்ளது. விதிமீறல் காரணமாக இந்த பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அங்கு ரோந்து சென்ற போலீசார் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவகாசி கண்ணன் 33, கைது செய்யப்பட்டார். பொன்னுச்சாமி தப்பினார். வெடிகளை பறிமுதல் செய்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.