யார் கூறுவது உண்மை? குழப்பத்தில் தமிழரசன்
யார் கூறுவது உண்மை? குழப்பத்தில் தமிழரசன்
யார் கூறுவது உண்மை? குழப்பத்தில் தமிழரசன்
ADDED : ஜன 08, 2024 05:48 AM
வேலுார் : ''ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்,'' என, இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன் வலியுறுத்தி உள்ளார்.
வேலுாரில், நேற்று முன்தினம் நடந்த அக்கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
'தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை கொண்டு வருவோம்' என, காங்., - பா.ஜ., இரு கட்சியும் கூறி வந்தன. ஆனால், அதை செயல்படுத்தவில்லை.
இதற்கு காலவரையறை நிர்ணயித்து, மத்திய அரசு சட்டம் இயற்றி, அதை அமல்படுத்த வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில், ஓட்டுச்சீட்டு வாயிலாக ஓட்டளிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்துக்கு தேவையான நிதியை ஏற்கனவே வழங்கி விட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஆனால், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அதை மறுக்கிறார். இதில், யார் கூறுவது உண்மையென தெரியவில்லை. லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.