திருவள்ளுவர் சிலை முகத்தை மூடியது யார்?: தமிழ் அமைப்புகள் கண்டனம்
திருவள்ளுவர் சிலை முகத்தை மூடியது யார்?: தமிழ் அமைப்புகள் கண்டனம்
திருவள்ளுவர் சிலை முகத்தை மூடியது யார்?: தமிழ் அமைப்புகள் கண்டனம்

கம்பீரம்
ஆண்டுதோறும் சிலை சிறப்பு நாளிலும், திருவள்ளுவர் தினத்திலும் எந்தவொரு பாகுபாடும் பாராமல், தமிழர் ஐக்கியத்தை வெளிப்படுத்தும் திருவிழாவாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். மொழி, இனம், ஜாதி, மதம், கட்சி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு உலக பொதுமறையை தந்தவர் என்பதை அடையாளம் காட்டும் திருவள்ளுவர் சிலை கம்பீரமாக இருந்து வருகிறது.
தமிழார்வலர்கள்
பின் தமிழார்வலர்கள் இணைந்து ஹலகுரு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அங்கிருந்து வந்த இரு போலீசார் அந்த துணியை அகற்றினர். சிலைக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து திருவள்ளுவர் சிலை புனித நீரால் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டது. மாலை அணிவித்து திருக்குறள் ஓதப்பட்டது.
அநாகரிகமான செயல்
பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் தலைவர் இராசு மாறன் அறிக்கை: பெங்களூரு ஹலசூரு ஏரி அருகில் தமிழ்ச்சங்கம் நிறுவிய திருவள்ளுவர் சிலையின் முகத்தில், முகமூடி போல ஒரு துணி கட்டி வைத்த செயல் கண்டிக்கத்தக்கது. இது வேண்டுமென்றே யாரோ திட்டமிட்டு செய்த செயலாக தோன்றுகிறது.
அரசு பாதுகாப்பு வேண்டும்!
தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் அறிக்கை: திருக்குறள் மனித வாழ்வுக்கு தேவையான அருமருந்து. திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் சிலையை ஐ.நா., சபை முன் நிறுவ அனைத்து தகுதிகளும் உள்ளன. உலக நாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறளை உதாரணம் காண்பித்து பேசி உள்ளார். சமீபத்தில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு மலர் துாவி வணங்கினார்.
சட்டப்படி உரிய நடவடிக்கை
பெங்களூரு தமிழ் இலக்கிய பேரவை தலைவர் கடையம் ஆறுமுகம் அறிக்கை:திருவள்ளுவர் இனம், மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன்பே, அனைத்து மதத்தினருக்கும், எல்லா மொழியினருக்கும் பொதுவான கருத்துகளை ஈரடிகளில் நமக்கு தந்தவர். அவரது, 1,330 குறள்களில் ஒன்றில் கூட ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயரோ அல்லது 'தமிழ்' என்று மொழியின் பெயரோ இல்லாததே இதற்கு சான்று.