விஜய் கூறியது மக்கள் கருத்தல்ல: பழனிசாமி
விஜய் கூறியது மக்கள் கருத்தல்ல: பழனிசாமி
விஜய் கூறியது மக்கள் கருத்தல்ல: பழனிசாமி
ADDED : செப் 22, 2025 01:59 AM

இடைப்பாடி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று அவரது சொந்த ஊரான, இடைப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்துக்கு வந்தார்.
அங்கு உறவினர்கள், கட்சியினரை சந்தித்து பேசினார். தொடர்ந்து இடைப்பாடி அரசு பயணியர் விடுதியில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து, இடைப்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் கொங்கணாபுரம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் மணி, நகர செயலர் முருகன், ஒன்றிய செயலர்கள் மாதேஸ்வரன், மாதேஸ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பழனிசாமி அளித்த பேட்டியில், ''பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரன், என்னை சந்தித்தபோது, தேர்தல் அரசியல் குறித்து விவாதித்தார். தேர்தல் சுற்றுப்பயணம் செய்வது குறித்தும் பேசினார். இரு கட்சியினரும் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசினோம்,'' என்றார்.
தொடர்ந்து, ''தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி என விஜய் கூறியது குறித்து கேட்டபோது, 'விஜய் கூறியது அவர் கருத்து தானே தவிர; மக்கள் கருத்தல்ல,'' என, தெரிவித்தார்.