/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அரூர் சுற்று வட்டார பகுதிகளில்,தொடர் மழை:அரூர் சுற்று வட்டார பகுதிகளில்,தொடர் மழை:
அரூர் சுற்று வட்டார பகுதிகளில்,தொடர் மழை:
அரூர் சுற்று வட்டார பகுதிகளில்,தொடர் மழை:
அரூர் சுற்று வட்டார பகுதிகளில்,தொடர் மழை:
ADDED : செப் 22, 2025 02:00 AM
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 6:30 மணி முதல், அரூர் மற்றும் செல்லம்பட்டி, கீழானுார், தீர்த்தமலை, பெரியப்பட்டி, கீரைப்பட்டி, மாம்பட்டி, அச்சல்வாடி, மோப்பிரிப்பட்டி, மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில், நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.
இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. அரூரில் பெய்த மழையால் நான்குரோடு, திரு.வி.க., நகர், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சாலையில், குளம் போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தொடர்மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்