சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் மீது என்ன நடவடிக்கை: உயர்நீதிமன்றம் கேள்வி
சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் மீது என்ன நடவடிக்கை: உயர்நீதிமன்றம் கேள்வி
சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் மீது என்ன நடவடிக்கை: உயர்நீதிமன்றம் கேள்வி
ADDED : ஜூன் 20, 2024 06:10 PM

மதுரை: சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த இரண்டு பெண்கள் உட்பட 42 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று(ஜூன் 20) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மது விற்போர், துணை போகும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.
போலீசார் மீது என்ன நடவடிக்கை?
இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கூறியதாவது: சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அலட்சியத்தால் கள்ளக்குறிச்சியில் பலர் இறந்துள்ளனர். சட்ட விரோதமாக மது விற்பனையை போலீசார் எப்படி அனுமதிக்கின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவம் போன்று இனி மேலும் ஒரு சம்பவம் நடக்க கூடாது.
சட்டவிரோத மது விற்பனை செய்தவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை மக்களே நேரில் சென்று வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோத மது விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.