கள்ளச்சாராயம் குடித்து பலியான 28 பேரின் உடல்கள் அடக்கம்
கள்ளச்சாராயம் குடித்து பலியான 28 பேரின் உடல்கள் அடக்கம்
கள்ளச்சாராயம் குடித்து பலியான 28 பேரின் உடல்கள் அடக்கம்
ADDED : ஜூன் 20, 2024 06:13 PM

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில், 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. 7 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த இரண்டு பெண்கள் உட்பட 42 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின், ஊர்வலமாக கருணாபுரத்தில் உள்ள கோமுகி ஆற்றங்கரைக்கு கொண்டு வரப்பட்டது. 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. 7 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டன. மயான இடத்தில் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் கூடினர். முன்னதாக தகனம் செய்யும் இடத்தில், சிறிது நேரம் லேசான மழை பெய்தது.