இன்னும் 4 நாட்களுக்கு வெப்பநிலை எகிறும்!
இன்னும் 4 நாட்களுக்கு வெப்பநிலை எகிறும்!
இன்னும் 4 நாட்களுக்கு வெப்பநிலை எகிறும்!
ADDED : ஜூன் 24, 2024 06:16 AM

சென்னை : 'இன்று முதல் நான்கு நாட்களுக்கு, இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும். வரும் 26 முதல், 29ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
இன்று முதல் 27ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில், அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகும்.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, சென்னை, வேலுார், திருத்தணி, பரங்கிப்பேட்டையில், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.