ADDED : ஜன 28, 2024 11:47 PM
ராமநாதபுரம் : ''ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் கேட்டு பெறுவோம்''என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியை எந்த நிபந்தனையும் இன்றி தொடர்ந்து ஆதரிப்போம். ராமநாதபுரத்தில் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியும், காங்., சார்பில் ராகுலும் போட்டியிட கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனரே, என்ற கேள்விக்கு ''எங்கள் கட்சியின் நவாஸ்கனி சிட்டிங் எம்.பி., யாக உள்ள ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் கேட்டு பெறுவோம். லோக்சபா தேர்தலில் பா.ஜ., வுக்கு எதிராக மக்கள் ஓட்டளிப்பார்கள். அதன்பிறகு யார் பிரதமர் என்பதைகூட்டணி கட்சிகள் தீர்மானிக்கும் என்றார்.
*ராமநாதபுரத்தில் நடந்த அக்கட்சியின் மண்டல பயிலரங்கில் காதர் முகைதீன் பேசியதாவது: சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். இந்த கொள்கையை தமிழகத்தில் ஆளக்கூடிய தி.மு.க., அரசு பின் பற்றி வருகிறது. அந்தகட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்றார்.