சாலைகளை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அகற்ற எச்சரிக்கை
சாலைகளை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அகற்ற எச்சரிக்கை
சாலைகளை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அகற்ற எச்சரிக்கை
ADDED : ஜன 04, 2024 10:45 PM
சென்னை:'சாலைகளை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறாக மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
டி.ஜி.பி., அலுவலக, ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி போன்ற பெரு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலும் சாலைகளை ஆக்கிரமித்து மாதக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
புதர்மண்டி கிடப்பதால், அந்த வாகனங்களின் மறைவில் கஞ்சா விற்பனை போன்ற குற்றங்களும் நடக்கின்றன. இதை கட்டுப்படுத்த மாநிலம் முழுதும் சாலைகளை ஆக்கிரமித்து, 15 நாட்களுக்கு மேல் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்ய உள்ளோம்.
சாலை ஆக்கிரமிப்பு வாகனங்களை அதன் உரிமையாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும். மாதக்கணக்கில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களுடன் இணைந்து, பறிமுதல் செய்து ஏலம் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.