எழுதி வைத்து படிப்பவர் விஜய்: சீமான்
எழுதி வைத்து படிப்பவர் விஜய்: சீமான்
எழுதி வைத்து படிப்பவர் விஜய்: சீமான்
ADDED : செப் 22, 2025 05:32 AM

பெரம்பலுார்: -பெரம்பலுாரில், நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுளால் பாதிக்கப்படும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து பொதுக்கூட்டம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
தமிழகத்தில் 75 லட்சம் பேர் படித்து விட்டு வேலையில்லாமல் உள்ளனர். தமிழக அரசு தேர்வாணையம் சார்பில், 3,937 பணியிடங்களுக்கான தேர்வு சரியாக நடத்தப்படவில்லை. தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது.
தமிழ்நாடு தேர்வு ஆணையத்தின் இந்த முறைகேட்டால், வேலை இன்றி தவிப்பவர்களுக்கு, மாநில அரசு என்ன பதில் கூறப்போகிறது. பல துறைகளில் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான், பணியில் அமர்த்துகின்றனர்.
தமிழகத்தில் எங்கு மக்கள் பிரச்னை இருந்தாலும், அங்கு சென்று நான் நிற்பேன். அதனால், எனக்கு சுற்றுப் பயணம் தேவையில்லை.
த.வெ.க., தலைவர் விஜய் என்னை விமர்சித்தார். நான் அவரை விமர்ச்சிக்கவில்லை. அவரது கொள்கை, கோட்பாடு என்ன என்பதை விஜய் கூறவேண்டும். அவரால் பதில் சொல்ல முடியவில்லை; குறை கூறுவதாக குற்றம் சாட்டுகிறார்.
அரசியலுக்கு வந்த பின், அனைவரின் கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும். எழுதி வைத்து படிக்கும் விஜயால், என் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது.
இவ்வாறு கூறினார்.