Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் ஓடவிட்ட சம்பவம்; அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் ஓடவிட்ட சம்பவம்; அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் ஓடவிட்ட சம்பவம்; அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் ஓடவிட்ட சம்பவம்; அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

UPDATED : மார் 25, 2025 11:32 AMADDED : மார் 25, 2025 11:06 AM


Google News
Latest Tamil News
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பஸ்சை நிறுத்தாமல் ஒட்டிச் சென்று பிளஸ் 2 மாணவியை ஓடவிட்ட சம்பவத்தில் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயத்துக்கு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. கொத்தக்கோட்டை என்ற இடத்தில் வந்த போது அங்குள்ள நிறுத்தத்தில் நிற்காமல் பஸ்சை அதன் டிரைவர் முனிராஜ் ஓட்டிச் சென்றுள்ளார்.

அதேநேரத்தில் முனிராஜ் ஒட்டி வந்த பஸ்சில் ஏறுவதற்காக பிளஸ் 2 மாணவி ஒருவர் காத்திருந்தார். அவர் நின்றிருந்த பஸ் நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தாமல் முனிராஜ் சென்றிருக்கிறார். அப்போது காத்திருந்த பிளஸ் 2 மாணவி பஸ்சை பின்னோலே துரத்திச் சென்று ஏறி உள்ளார்.

பள்ளி மாணவி பஸ்சை பிடிக்க ஓடிச் சென்றதையும், பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச் சென்றதையும் அவ்வழியாக சென்ற சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதோடு, கடும் விமர்சனங்களையும் எழுப்பியது. இதையடுத்து, பள்ளி மாணவியை ஓடவிட்ட டிரைவர் முனிராஜை போக்குவரத்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அதே பஸ்சில் இருந்த நடத்துநர் தற்காலிக பணியாளர் என்பதால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அவரை பணியில் இருந்து விடுவிக்க கோரப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us