Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வாணியம்பாடியில் மரச்சாமான் கடையில் பயங்கர தீ விபத்து

வாணியம்பாடியில் மரச்சாமான் கடையில் பயங்கர தீ விபத்து

வாணியம்பாடியில் மரச்சாமான் கடையில் பயங்கர தீ விபத்து

வாணியம்பாடியில் மரச்சாமான் கடையில் பயங்கர தீ விபத்து

ADDED : செப் 07, 2025 10:22 AM


Google News
Latest Tamil News
வாணியம்பாடி: வாணியம்பாடியில் மரச்சாமான்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

இதுபற்றிய விவரம் வருமாறு:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் மரச்சாமான்கள் கடை ஒன்று உள்ளது. சம்பத் என்பவர் இதன் உரிமையாளர். இங்கு பர்னிச்சர்களையும் அவர் விற்பனை செய்து வருகிறார்.

இன்று அதிகாலை கடையில் திடீரென தீப்பற்றியது. மளமளவென தீ கடை முழுவதும் பரவியது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.

பல மணி நேரம் போராடி அவர்கள் தீயைக் கட்டுப்படுத்தினர். இருப்பினும், கடையில் வைக்கப்பட்டு இருந்த தேக்கு மரக்கட்டைகள், மரச்சாமான்கள், இயந்திரங்கள் எரிந்து சேதம் அடைந்தன. இந்த பொருட்களின் மதிப்பு பல லட்சம் என்று தெரிகிறது.

தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இருப்பினும், மின்கசிவே விபத்துக்ககு காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us