அமெரிக்க வரி விதிப்பால் தொழில் பாதிப்பு; நடவடிக்கை எடுக்க விஜய் வலியுறுத்தல்
அமெரிக்க வரி விதிப்பால் தொழில் பாதிப்பு; நடவடிக்கை எடுக்க விஜய் வலியுறுத்தல்
அமெரிக்க வரி விதிப்பால் தொழில் பாதிப்பு; நடவடிக்கை எடுக்க விஜய் வலியுறுத்தல்
ADDED : செப் 01, 2025 04:40 AM
சென்னை : 'அமெரிக்காவின் 50 சதவீதம் வரிவிதிப்பால், தமிழக ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்' என, த.வெ.க., தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
அமெரிக்காவின் வரி விதிப்பு, தமிழக ஏற்றுமதியாளர்களின் தலையில் விழுந்த மிகப் பெரிய 'இடி' ஆகும். வெளியுறவு கொள்கையில், ஒரு முன்முயற்சி எடுத்திருந்தால், இந்த சூழ் நிலையை தடுத்திருக்க முடியும்.
'உலகளாவிய தெற்கின் குரல்' என மத்திய அரசு பெருமையாகக் கூறிக் கொண்டாலும், அமெரிக்காவின் வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தும், இந்திய தொழில்களை பாதுகாக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தை ஆளும் தி.மு.க., அரசும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், 'முதலீட்டு உச்சி மாநாடுகள்' மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த வெற்று விளம்பரங்களோடு, தன்னை நிறுத்திக் கொண்டது.
எனவே, தொழில் மற்றும் வே லை வாய்ப்பை பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள், போர்க்கால அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக, மத்திய, மாநில அளவில், கூட்டு பணிக்குழுவை உருவாக்க வேண்டும். அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்று மதியாளர்களை ஆத ரிக்க , மத்திய அரசு, சிறப்பு ஏற்றுமதி நிலைப்படுத்தல் நிதியை உருவாக் க வேண்டும்.
பாதிப்புக்கு உள்ளாகும் தொழிலாளர்கள், நிறுவனங்களை பாதுகாக்க, அவர்களின் ஊதியத்திற்கு உத்தரவாதம் தருவது, மானியத்துடன் கூடிய கடன் வழங்குவது போன்ற நிவாரண நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.