'பாட்காஸ்ட்' ஒளிபரப்பு மாணவர்களுக்கு அழைப்பு
'பாட்காஸ்ட்' ஒளிபரப்பு மாணவர்களுக்கு அழைப்பு
'பாட்காஸ்ட்' ஒளிபரப்பு மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : செப் 01, 2025 05:09 AM
சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் டிஜிட்டல் ஒளிபரப்பு தளமான, 'பாட்காஸ்ட்'டில், மாணவர்கள் பங்கேற்க, பள்ளி களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
சி.பி.எஸ்.இ., சார்பில், 'சிக்ஷா வாணி' எனும் இணையவழி, 'பாட்காஸ்ட்' ஒளிபரப்பை துவக்கி உள்ளது. இதில், மாணவர்கள், ஆசிரியர்களுக்கான தகவல்கள், அறிவிப்புகள் உள்ளிட்டவை பகிரப்படுகின்றன. இதை வலுப்படுத்தும் வகையில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களை உள்ளடக்கிய தளமாக வளர்த்தெடுக்கும் வகையில், பல்வேறு தகவல்கள் டிஜிட்டல் முறையில் பகிரப்படுகின்றன.
இந்நிலையில், கல்வி சார்ந்த விவாதங்களில், மாணவர்களை பங்கேற்க வைக்கும்படி, பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள், கல்வி, தேர்வு, மனநலம், நலவாழ்வு உள்ளிட்ட தகவல்களை, ஆடியோ அல்லது வீடியோ வழியே பகிரலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.