Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விஜய் நேற்று சொன்னதும்... ரசிகர்கள் இன்று செய்ததும்!!

விஜய் நேற்று சொன்னதும்... ரசிகர்கள் இன்று செய்ததும்!!

விஜய் நேற்று சொன்னதும்... ரசிகர்கள் இன்று செய்ததும்!!

விஜய் நேற்று சொன்னதும்... ரசிகர்கள் இன்று செய்ததும்!!

ADDED : செப் 20, 2025 01:23 PM


Google News
Latest Tamil News
நாகப்பட்டினம்: மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவுறுத்திய 12 வழிகாட்டு நெறிமுறைகளை ரசிகர்கள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.

மக்கள் சந்திப்பு பயணத்தின் போது தனது வாகனத்தை யாரும் இரு சக்கர வாகனங்களில் பின்தொடர வேண்டாம், வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம், குழந்தைகள், முதியவர்கள், பள்ளி செல்லும் சிறுவர்கள், நிகழச்சியை தவிர்க்க வேண்டும், வீட்டில் இருந்தபடி நேரலையில் காண வேண்டும், மரங்களில் ஏற வேண்டாம் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்து இருந்தார்.

தனது இந்த 12 வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு இருந்தார். இந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். நாகையில் இன்று சுற்றுப்பயணம் செய்த போது ரசிகர்கள் ஆரவாரமாய் திரண்டு வந்தேதே அதற்கு சாட்சி

விஜய் பயணம் செய்த பிரசார பஸ்சின் பின்னாலும், அதன் பக்கவாட்டிலும் இளைஞர்கள், ரசிகர்கள் ஓடிக்கொண்டே இருந்தனர். ஒரு பக்கம் ஓட்டம், மறுபக்கம் ஆட்டம் அப்படியே செல்பி என்று ரசிகர்கள் ஆர்வம் நேரம் போக போக அதிகமாகி கொண்டே போனது.

பஸ்சை பின்தொடர்ந்து பைக்குகளில் ரசிகர்கள் பட்டாளம் ஜேம்ஸ் பாண்ட் கணக்காய் பறந்து பாய்ந்து வந்தது தனிக்கதை. அதிலும் பக்கவாட்டு கண்ணாடிகளில் கைகளை இரு கண்களின் பக்கவாட்டில் குவித்து வைத்து, உள்ளே என்ன இருக்கிறது, விஜயுடன் வேறு யாரேனும் வந்திருக்கிறார்களா என்று உற்று பார்த்த ரசிகர்களின் டெக்னிக் தனி ரகம்.

நாகை புத்தூர் அண்ணாதுரை சிலை பகுதியில் திரண்டிருந்த ரசிகர்கள் + தொண்டர்கள் ஆர்வமும், மகிழ்ச்சியும் தாளாமல் அருகில் உள்ள உயரமான கட்டடங்களில் குதியாட்டம் போட்டனர். இவர்கள் தவிர, பலரும் அருகில் உள்ள மற்ற கட்டடங்கள், வீடுகளின் மேற்கூரையில் ஏறி, எவ்வித பாதுகாப்பின்றி கூட்டமாக நின்று கைகளை ஆட்டி உற்சாகமாக ஆரவாரமிட்டனர்.

சிறுவர்கள், சிறுமியர்களை சிலர் தங்களின் தோள்களில் உட்கார வைத்து ஆட்டம் போட்டனர். அந்த சிறுவர்களும் கட்சிக் கொடியை கழுத்தில் சுற்றியபடியும், கைகளால் தலைக்கு மேலே விசிறியபடியும் இருந்தனர்.

எங்களுக்கும் இடம் கிடைக்காதா என்று எண்ணிய விவரமான ரசிக கண்மணிகள் பல அடி உயரம் கொண்ட கட் அவுட்களில் பகீர பிரயத்தனம் செய்து ஏறினர். பின்னர் அதன் வழியே விஜயை நோக்கி கைகளை காட்டினர்.

வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நிரம்பி வழிந்தபடி இருக்கே, போலீசார் எங்கே என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

என்னதான் ஆரவாரம், கொண்டாட்டம், உற்சாகம் என்று எத்தனை வார்த்தைகளில் ரசிகர்கள் மாஸாக வர்ணித்தாலும், பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும் என்பதே அரசியல் பேசுவோரின் வாய்ஸாக இருக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us