தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சி முதலிடம்
தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சி முதலிடம்
தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சி முதலிடம்
ADDED : ஜன 11, 2024 11:04 PM
திருச்சி;துாய்மை இந்தியா திட்டம்- 2023ல், இந்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நடத்திய சர்வேயில், தமிழகத்தின் துாய்மையான நகரமாக திருச்சியை அறிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்ற 446 முக்கிய நகரங்களில், 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், திருச்சி 112வது இடத்தைப் பிடித்தது. தமிழகத்தில், முதல் இடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், திருச்சி நகரம் 262வது இடத்தில் இருந்தது.
சேவை நிலை முன்னேற்றம் (உள்ளூர் அமைப்பின் ஆவணப் பணிகள்), சான்றிதழ் மற்றும் குடிமக்கள் கருத்து ஆகிய மூன்று பிரிவுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 9,500 மதிப்பெண்களுக்கு, திருச்சி 5,794.9 மதிப்பெண் பெற்றுள்ளது. பெரும்பாலான மதிப்பெண்கள் சேவை நிலை முன்னேற்றம் மற்றும் குடிமக்கள் கருத்து வகைகளில் கிடைத்துள்ளது.
நன்கு பராமரிக்கப்பட்ட பொதுக் கழிப்பறைகளின் அடையாளமாக, மத்திய அமைச்சகத்திடம் இருந்து திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத சான்றிதழை திருச்சி பெற்றிருந்தாலும், குப்பை இல்லா நகரம் என்ற நட்சத்திர மதிப்பீடு கட்டமைப்பில், எந்த மதிப்பீட்டையும் பெறவில்லை.
மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்தல் மற்றும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துதல் உள்ளிட்ட 12 மதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்பு, நீர் நிலைகளின் துாய்மை, குடியிருப்புப் பகுதிகளின் துாய்மை ஆகியவற்றில் திருச்சி முழு மதிப்பெண் பெற்றுள்ளது.
மண் குவியலை அகற்றுவதற்காக சாலைகளை துடைத்தல், நகரின் நுழைவுப் பகுதிகளை அழகுபடுத்துதல், குப்பைத் தொட்டிகளை பசுமையான இடமாக மாற்றுதல் ஆகிய செயல்பாடுகள், திருச்சிக்கு சிறந்த மதிப்பெண் பெற்றுத் தந்துள்ளது.[21:40, 11/01/2024] Try Sundarrajan1: 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 20 ஆண்டு சிறைதிருச்சி, ஜன. 12-திருச்சியில், 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு, மகளிர் நீதிமன்றம், 20 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.கடந்த 16.8.2020ல், திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பசுபதி, 27, வரதராஜ், 29, திருப்பதி, 29, ஆகியோர் சேர்ந்து, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்த புகார்படி, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, 3 பேரையும் கைது செய்தனர். கடந்த 23.9.2020ல், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்சன், போக்சோ சட்டப்படி, 3 பேருக்கும் 20 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், 2 சட்டப்பிரிவுகளில், 6 ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும், என்று உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு தரப்பில், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்ற போது, பசுபதி, திருப்பதி ஆகியோர் நீதிமன்ற கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்துள்ளனர். இதில், பலத்த காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.