உயர் சிறப்பு மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி
உயர் சிறப்பு மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி
உயர் சிறப்பு மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி
ADDED : ஜன 31, 2024 12:57 AM
சென்னை:முதுநிலை மருத்துவ படிப்புக்கு பின், டி.எம்., --- எம்.சி.ஹெச்., - டி.என்.பி., உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு, நீட் நுழைவு தேர்வு உள்ளது. ஆனால், கவுன்சிலிங்கில் நாடு முழுதும் பெரும்பாலான இடங்கள் நிரம்பவில்லை. அதனால், சிறப்பு கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.
இதற்காக, நீட் தகுதி மதிப்பெண் ரத்து செய்யப்பட்டது. முதுநிலை மருத்துவ படிப்புக்கு பின் நீட் தேர்வு எழுதியவர்கள், சிறப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள, 21 உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேர, டாக்டர்கள் இன்று மாலை, 3:00 மணிக்குள் பதிவு செய்யலாம் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, https://tnmedicalselection.net என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.