பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தங்கம் விலை பவுனுக்கு இன்று ரூ.560 குறைந்தது
பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தங்கம் விலை பவுனுக்கு இன்று ரூ.560 குறைந்தது
பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தங்கம் விலை பவுனுக்கு இன்று ரூ.560 குறைந்தது
ADDED : ஆக 06, 2024 09:44 AM

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 6) ஆபரண தங்கத்தின் விலை, பவுனுக்கு 560 ரூபாய் குறைந்தது. ஒரு பவுன், 51,200 ரூபாய்க்கும், கிராம் 6,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. சமீபத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை, 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார். இதனால் கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.
கிராம் ரூ.6,400க்கு விற்பனை
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை, பவுனுக்கு 560 ரூபாய் குறைந்தது. ஒரு பவுன், 51,200 ரூபாய்க்கும், கிராம் 6,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.