Dinamalar-Logo
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

Latest Tamil News
சென்னை: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பணிகளில் காலியாக உள்ள 3925 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஜூலை 12ம் தேதி தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வை எழுத லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந் நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிகிறது.

தேர்வுக்கு www.tnpsc.gov.in இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க மே 24 நள்ளிரவு 11.59 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை திருத்த மே 29ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us