9 அடி குழியில் விழுந்த புலி மற்றும் நாய்: காயமின்றி பத்திரமாக மீட்ட வனத்துறை
9 அடி குழியில் விழுந்த புலி மற்றும் நாய்: காயமின்றி பத்திரமாக மீட்ட வனத்துறை
9 அடி குழியில் விழுந்த புலி மற்றும் நாய்: காயமின்றி பத்திரமாக மீட்ட வனத்துறை
ADDED : ஜூன் 08, 2025 07:34 PM

இடுக்கி: கேரள- தமிழக எல்லைக்கு அருகே 9 அடி குழியில் விழுந்த புலியும் நாயும், சிறிதும் காயமின்றி பத்திரமாக வனத்துறை மீட்டனர்.
தமிழக-கேரள எல்லைக்கு அருகில் உள்ள மயிலாடும்பாறை அருகே 9 அடி குழியில் சிக்கிய புலி மற்றும் நாய் இரண்டும் குழிக்குள் விழுந்தது. தொடர்ந்து கேட்ட சத்தத்தால் அப்பகுதியே வந்தவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இன்று காலை புலி, நாயைத் துரத்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இரண்டும் குழியில் விழுந்து சிக்கி கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.தகவல் கிடத்த உடனே வனத்துறை ஊழியர்கள் தமிழ்நாடு வனப்பகுதிக்கும் பெரியார் சரணாலயத்திற்கும் இடையில் அமைந்துள்ள இடத்திற்கு அனுப்பப்பட்டனர். அந்த பகுதி வழக்கமாக புலிகள் காணப்படும் பகுதி அல்ல. ஆனாலும் அங்கு சென்ற வனத்துறையினர் புலி மற்றும் நாயை மீட்க நடவடிக்கை எடுத்தனர். பிற்பகலில் புலி மற்றும் நாய் இரண்டையும் அமைதிப்படுத்தும் பணி நிறைவடைந்தது. வலையை பயன்படுத்தி குழியிலிருந்து வெளியே இழுக்கப்பட்டது. அதன்பிறகு மற்றொரு கூண்டிற்கு புலியை மாற்றப்பட்டது. புலி சத்தமிட்டபோது நாய் குரைக்கத் தொடங்கியது, புலியின் உறக்கத்தை நாய் குரைத்து தொந்தரவு அளித்தது. இதனால் நாயை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது. குழிக்குள் விழந்த புலி மற்றும் நாய் இரண்டிற்கும் காயம் ஏற்படவில்லை. புலிக்கு ஏதேனும் உடல் ரீதியான பிரச்சனை உள்ளதா என பரிசோதிக்கப்படும், மேலும் ஆரோக்கியமாக இருந்தால், பெரியார் சரணாலயத்தில் விடப்படும்.
இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் கூறினர்.