இன்று இடி மின்னல் பலத்த காற்றுடன் மழை
இன்று இடி மின்னல் பலத்த காற்றுடன் மழை
இன்று இடி மின்னல் பலத்த காற்றுடன் மழை

சென்னை: 'மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், மதுரை மாவட்டம் கள்ளந்திரி, சென்னை பாரிமுனை, அயப்பாக்கம் ஆகிய இடங்களில், தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று, இடி மின்னல் மற்றும் 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் ஒருசில இடங்களில், ஜூன் 9 வரை இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது. மழையின் தாக்கம் படிப்படியாக குறையலாம். ஒருசில இடங்களில் இன்று வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், லேசான மழை பெய்யலாம்.
10 இடங்களில் சதம்
நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக, மதுரை விமான நிலைய பகுதியில், 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, பாளையங்கோட்டை, வேலுார், சென்னை மீனம்பாக்கம், அதிராம்பட்டினம், ஈரோடு, கரூர் பரமத்தி, பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சியில், தலா, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.