/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரயில்வே தொழிற்சங்கத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் ரயில்வே தொழிற்சங்கத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்
ரயில்வே தொழிற்சங்கத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்
ரயில்வே தொழிற்சங்கத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்
ரயில்வே தொழிற்சங்கத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்
ADDED : ஜூன் 06, 2025 06:46 AM

விழுப்புரம்; விழுப்புரத்தில் அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி., ரயில்வே தொழிற்சங்கம் கிளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் ரயில்வே குடியிருப்பில் உள்ள அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி., ரயில்வே தொழிற்சங்க கிளை அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிளை செயலாளர் சண்முகராஜா தலைமை தாங்கினார். தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் (குடியிருப்பு) ரேஷ்மா, உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுவதன் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதற்கான முக்கியத்துவம், மரக்கன்றுகள் நடுவதன் பயன்கள் பற்றி சிறப்புரையாற்றி, மரக்கன்றுகளை நட்டார்.
தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், துணை தலைவர் ராமமூர்த்தி, உதவி செயலாளர் கவுதமி, அமைப்பு செயலாளர் ராஜேஷ்ராம், நிர்வாகிகள் ஸ்டாலின், ரஜினிகாந்த், வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.