'அணை திறந்து 20 நாளாகியும் கடைமடைக்கு தண்ணீர் இல்லை'
'அணை திறந்து 20 நாளாகியும் கடைமடைக்கு தண்ணீர் இல்லை'
'அணை திறந்து 20 நாளாகியும் கடைமடைக்கு தண்ணீர் இல்லை'
ADDED : ஜூலை 04, 2025 01:45 AM

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
கால்வாய்களை துார்வாராமல், கடந்த ஜூன் 12ல் மேட்டூர் அணையிலிருந்து, முதல்வர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து விட்டார்.
இதனால், தண்ணீர் திறக்கப்பட்டு 20 நாட்கள் கடந்தும், கடைமடை பகுதிகளுக்கு செல்லவில்லை; அங்கு, விவசாயிகள் நடவுப்பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடல் முகத்துவார சீரமைப்புக்காக ஆசிய வளர்ச்சி வங்கி, வழங்கும் நிதியை பெற, தி.மு.க., அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
மேட்டூர் அணை நிரம்பி, உபரி நீர் கடலில் கலக்கும் சூழ்நிலையில், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாதது ஏன்? உரிய முறையில் தண்ணீரை விவசாயிகளிடம் சேர்ப்பதில், தி.மு.க., அரசுக்கு என்ன சிக்கல்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.