ADDED : ஜூன் 23, 2025 06:11 AM
முதல் சங்கி முருகன்
முருக பக்தர்கள் மாநாட்டில் ஹிந்து முன்னணி பொருளாளர் பக்தவத்சலம் பேசியதாவது:
மதுரையில் எதற்கு மாநாடு என கேட்டனர். கடவுள் பிறந்து, விளையாடி ஆட்சி செய்த மண் மதுரை. தமிழுக்கு சங்கம் வைத்த முதல் சங்கி முருகன். அவனின் அப்பா சிவன். அனைத்து கடவுளும் சங்கிகள் தான். இதனால், நாமெல்லாம் கூட சங்கிகள் தான் என உரக்க சொல்வோம். கோவிலுக்கு செல்பவர்கள் எல்லாம் பக்திமான் கிடையாது.
சிவனை நோக்கி அகத்தியர், சூரபத்மன் தவமிருந்தனர். கடவுள் பேச்சு கேட்டு, தமிழகம் வந்து தமிழை வளர்த்தார் அகத்தியர்.
சூரபத்மன், வரம் வாங்கி வந்து ஆட்சி செய்தான். பல குழந்தைகள் பெற்று, கொள்ளையடித்து மக்களை கஷ்டபடுத்தினான். மக்கள் முருகனை நாடினர். முருகன் வந்த பின் தர்மம் வென்றது.
பாரத நாட்டில் பவன் கல்யாண், யோகி ஆதித்யநாத் ஆகியோர் மட்டும் தான் கடவுளை தவறாக பேசுவோரை துணிச்சலாக எதிர்த்தவர்கள். அதனால் அவர்களை மாநாட்டிற்கு அழைத்தோம்.