ADDED : பிப் 12, 2024 06:01 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி, கருவை கலைத்த தஞ்சாவூரை சேர்ந்த கேசவன் 19, அவரது குடும்பத்தினரை போலீசார் தேடுகின்றனர்.
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. தனியார் நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். அதே கல்லுாரியில் தஞ்சாவூரைச் சேர்ந்த கேசவன் 19 கேட்டரிங் பிரிவில் படிக்கிறார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் கேசவன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பேராவூர் அருகே நண்பர் வீட்டில் பலாத்காரம் செய்தார்.
இதனால் கர்ப்பமான சிறுமியை ஜன.,9ல்- கேசவன் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றார். அங்கு பெற்றோரிடம் விஷயத்தை கூறிய நிலையில் கேசவனின் தாய், அக்கா உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு மாத்திரை கொடுத்தனர்.
கரு கலைந்தபின் சிறுமியை கேசவன் ராமநாதபுரம் அழைத்து வந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
வீட்டிற்கு வந்த சிறுமி பெற்றோரிடம் தனக்கு நடந்ததை கூறினார்.
பெற்றோர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கேசவன், அவரின் தாய், அக்காவை தேடுகின்றனர்