பழநியில் தெப்ப உற்ஸவத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு
பழநியில் தெப்ப உற்ஸவத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு
பழநியில் தெப்ப உற்ஸவத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு
ADDED : ஜன 29, 2024 12:19 AM

பழநி : பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தெப்ப உற்ஸவத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைந்தது.
பழநி கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா ஜன.19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜன.24ல் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம், இரவு வெள்ளி ரதத்தில் ரத வீதியில் தேரோட்டம் நடந்தது. ஜன.25ல் தேரோட்டம் நடந்தது. வெள்ளி ஆட்டுக்கடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது.
ஜன.27 ல் இரவு பெரிய தங்கமயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். 10ம் நாள் திருவிழாவான நேற்று காலை வள்ளி, முத்துக்குமாரசாமி திருமண வைபவத்தால், தெய்வானை கோபித்துக் கொள்ள, துாதரான வீரபாகு சென்று சமாதானம் செய்து கோயில் கதவை திறக்கும் திருஊடல் நிகழ்ச்சி நடந்தது.
கோயில் தெப்ப குள மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுவாமி எழுந்தருளி தெப்ப உற்ஸவம் நடந்தது.
இரவு கொடி இறக்குதலுடன் தைப்பூச உற்ஸவம் நிறைவு அடைந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.