அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்; டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்; டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்; டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு

சென்னை: அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 'டாஸ்மாக்' நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டாஸ்மாக் ரெய்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், மாநில அரசின் அனுமதியின்றி பி.எம்.எல்.ஏ., சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்துவதை அனுமதிக்கக் கூடாது. சோதனையின் போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.