தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?

முதல்வர் ஸ்டாலின்
* மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்
அ.தி.மு.க.,பொதுச்செயலாளர், இ.பி.எஸ்.,
தி.மு.க.,வின் பல்வேறு வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ரேஷனில் ஒரு கிலோ சக்கரை அதிகமாக வழங்கப்படும் என்ற தி.மு.க.,வாக்குறுதி என்ன ஆனது? நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
வெற்று அறிவிப்பு
அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஒரு ஆண்டில் எப்படி 40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது சாத்தியமா?கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதிய உயர்வு எங்கே? தேர்தலுக்காக வெற்று அறிவிப்புகள். விளம்பர பட்ஜெட்.
கடன் அதிகரிப்பு
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்புகளை நிரப்பவே முடியாது. நாளுக்கு நாளுக்கு கடன் அதிகரித்து கொண்டே செல்கிறது. நிர்வாகத் திறமையற்ற அரசு நடக்கிறது. மக்களின் கோபம், கொந்தளிப்பை குறைக்க முயற்சிக்கிறார்கள். அது நடக்காது.
தமிழக பா.ஜ., தலைவர், அண்ணாமலை
பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க., வெளியிடும் பட்ஜெட்டும், இது போன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை.
பாசாங்கு
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பட்ஜெட் அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம், இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே. கல்லூரிக் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப் போகின்றீர்கள்?
மார்க்சிஸ்ட் கருத்து
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மகளிர் உரிமைத் திட்டம் விரிவாக்கம், மாணவர்களுக்கு காலை நேர உணவு திட்டம், நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி கூடுதலான நிதி ஒதுக்கீடு, கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி, மாநகராட்சிகளில் உள்ள 30 இடங்களில் முதல்வர் படிப்பகம், ஐந்து லட்சம் மனைப்பட்டாகள், நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு, பெற்றோரை இழந்த மாணவ மாணவியருக்கு 18 வயது எட்டும் வரை மாதம் ரூ.2 ஆயிரம், ஆதரவற்ற முதியோருக்கு அன்பு சோலை எனும் பராமரிப்பு இல்லங்கள் ஆகியன வரவேற்கத்தக்கது. தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் இலக்கியங்கள் மற்ற மொழிகளில் மொழி பெயர்ப்பது, புதிய நூலகங்கள், வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் தமிழ் புத்தக கண்காட்சிகள் நடத்துவது ஆகியன வரவேற்கத்தக்கது.