கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க சர்வே பணி
கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க சர்வே பணி
கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க சர்வே பணி
ADDED : ஜன 02, 2024 10:22 PM
சென்னை:தெற்கு ரயில்வேயில் ஏழு வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதை அமைக்க, இறுதிகட்ட சர்வே பணி துவங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயில் முக்கிய ரயில் பாதையை இணைத்து, கூடுதல் ரயில் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, ஏழு வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டு, அதற்கான இறுதிகட்ட ஆய்வுப் பணி, 7.80 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வழித்தடங்கள் அமைப்பு, பயணியர் எண்ணிக்கை, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட விபரங்கள் குறித்த அறிக்கை, அடுத்த சில மாதங்களில், ரயில்வேயிடம் ஒப்படைக்கப்படும்.
ரயில்வே ஒப்புதல் பெற்ற பிறகு, திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி மேற்கொள்ளப்படும்.
இந்த ரயில் பாதை, பயன்பாட்டிற்கு வரும்போது, கூடுதல் ரயில் வசதி கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அட்டவணை:
இறுதிகட்ட சர்வே பணி - வழித்தடம் - கி.மீ., துாரம்
----------------- ----------------
அரக்கோணம் - செங்கல்பட்டு 2வது பாதை - 68
அரக்கோணம் - ஜோலார்பேட்டை 3, 4வது பாதை - 145
திருச்சி - கரூர் இரட்டை பாதை பணி - 75
சூலுார்பேட்டை - கூடூர் 3, 4வது பாதை - 55
கும்மிடிப்பூண்டி - சூலுார்பேட்டை 3, 4வது பாதை - 35
கொருக்குப்பேட்டை - பேசின்பிரிட்ஜ் - 5
கடலுார் துறைமுகம் - கடலுார் சந்திப்பு - 7