ADDED : பிப் 23, 2024 10:20 PM
சென்னை:ஈரோடு, மதுரை, திருச்சி, நாமக்கல், கரூர் பரமத்தி ஆகிய நகரங்களில் நேற்று, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, 35 டிகிரி செல்ஷியசை ஒட்டி காணப்படும்.
நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடில், 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது 39.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. கரூர் பரமத்தியில் 102; மதுரை விமான நிலையத்தில் 101; நாமக்கல், திருச்சியில் தலா, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.