படிப்பும் படிச்சாச்சு வேலையும் கிடைச்சாச்சு
படிப்பும் படிச்சாச்சு வேலையும் கிடைச்சாச்சு
படிப்பும் படிச்சாச்சு வேலையும் கிடைச்சாச்சு
ADDED : ஜன 07, 2024 02:34 AM
இன்றைய தினம் கல்விக்கு தான் அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. வெறும் ஏட்டுக் கல்வி மட்டும் போதாது. படித்துக் கொண்டிருக்கும் போது அல்லது படித்து முடித்தவுடன் அதனை பட்டை தீட்டுவதும் முக்கியம்.
தொடர்ந்து படிப்பு செலவுகள் என்றால் அது பெற்றோரால் சமாளிக்க முடியாத ஒன்று. ஆதலால், ஒரு புதிய யோசனை அதாவது 'Income Sharing Arrangement (ISA)' என்பது கடந்த நடைமுறையில் இருந்து வருகிறது.
இது ஒரு புதிய யோசனை, ஆனால், மகத்தான ஆற்றலை கொண்டது. கல்வி, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று. தரமான கல்விக்கு நிதி உதவி அளிப்பது என்பதில் வருமான பங்கு ஒப்பந்தங்களின் (Income Sharing Arrangement) ஒரு முக்கிய பங்காற்றி வருகின்றன. இதனை எளிதாக புரிந்து கொள்ள Pay After Placement என்றும் அழைக்கலாம்.
ISA என்ன செய்கிறது, கல்விக் கடன் வழங்கு பவர்களுக்கான 'ரிஸ்க்'-ஐ குறைப்பதன் வாயிலாக, சந்தைப்படுத்தக்கூடிய கல்விப் படிப்புகளுக்கு கடனுதவி அளிக்கும் முறையை எளிதாக்குகிறது. விலையுயர்ந்த பயிற்சிகள் தேவைப்படும் மாணவர்களின் எண்ணத்துக்கு ஏற்ப சிறப்புப் படிப்புகள் மூலம் மதிப்புமிக்க திறன்களை வழங்கும் நிறுவனங்களை இது ஊக்குவிக்கிறது.
மாணவர்களுக்கு இந்த பயிற்சியை கட்டணமில்லாமல் அல்லது குறைந்த கட்டணத்தில் பயிற்றுவிக்கும் போது, ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்டுகிறது. இதுவே, Income Sharing Agreement எனப்படும்.
இது போன்ற ஒப்பந்தம் வழங்கும் நிறுவனங்கள் பொதுவாக மாணவர்களுக்கு சரியான வேலையைக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்கு வகிப்பதால், ஒட்டுமொத்த ஆபத்து குறைகிறது.
பல நாடுகளில், ISA கல்விக்கான பிசினஸ் மாடலாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில், ISA இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது. ஒரு சில 'ஸ்டார்ட்அப்'கள் முக்கிய படிப்புகளுக்கு ISA க்களை வழங்குகின்றன. ISA கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத தகுதியுள்ள மாணவர்களை சேர்க்க நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.
இது பெரும்பாலும் முதுகலை படிப்புகளுக்கு, குறிப்பாக தற்போதைய ஜாப் மார்க்கெட்டுக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் சிறப்புப் படிப்புகள் படிக்க உதவுகிறது.
எப்படி செயல்படுகிறது
பாடத்திட்டத்தை முடித்த பின், சில ISA கம்பெனிகள் குறைந்தபட்ச ஆண்டு ஊதியம் (CTC அடிப்படையில்) 5 லட்சம் ரூபாயை உறுதி செய்கிறது. மாணவர்கள் தங்கள் சம்பளத்தில், 15 சதவீதத்தை திருப்பி செலுத்துகின்றனர். திருப்பிச் செலுத்தும் காலம் பொதுவாக 2-3, ஆண்டுகள். ISA என்பது ஒரு ஒத்திவைக்கப்பட்ட கட்டணம் செலுத்தும் மாடல், இதை NBFC-fintech நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படுகிறது.
படிப்பு கட்டணத்துக்கு மாணவர்கள் NBFCக்கு வட்டி செலுத்த வேண்டாம். இத்தகைய ஏற்பாடு ஒரு பொதுவான மானியம் (Subvention) சார்ந்த தனிநபர் கடன்.
சில நிறுவனங்கள்:
உங்கள் சந்தேகங்களுக்கு இ-மெயில் Sethuraman.sathappan@gmail.com
அலைபேசி எண் 98204 51259 இணையதளம் www.startupand businessnews.com
-சேதுராமன் சாத்தப்பன்-