நாம் தமிழர், வி.சி.க.,வுக்கு மாநில கட்சி அந்தஸ்து: கிடைத்தது "ஜாக்பாட்"
நாம் தமிழர், வி.சி.க.,வுக்கு மாநில கட்சி அந்தஸ்து: கிடைத்தது "ஜாக்பாட்"
நாம் தமிழர், வி.சி.க.,வுக்கு மாநில கட்சி அந்தஸ்து: கிடைத்தது "ஜாக்பாட்"
ADDED : ஜூன் 05, 2024 11:15 AM

சென்னை: லோக்சபா தேர்தலில் 8.19 சதவீத ஓட்டுகளை பெற்ற நிலையில்
தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை நாம் தமிழர் கட்சி பெற்றது. இரண்டு எம்.பி.,க்களை பெற்றதால் விடுதலை சிறுத்தை கட்சிக்கும் அங்கீகாரம் கிடைத்தது.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி அரக்கோணம், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 6 தொகுதிகளில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள பெரும்பாலான தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 4ம் இடத்தையே பிடித்தது. இதனால் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.
தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8 சதவீத ஓட்டுகள் தேவை என்ற நிலையில் அதனை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது .
இதேபோல் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது. 2019ம் ஆண்டு ஒரு தொகுதியில் மட்டுமே தனிச்சின்னத்தில் போட்டியிட்டதால் அக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. தற்போது இரு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வென்றதால், மாநில அந்தஸ்து பெற்றுள்ளது.