விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்!
விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்!
விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்!

திருநெல்வேலி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் பணியாற்றிய பிரபல விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து, 74, திருவனந்தபுரத்தில் திடீர் உடல் நலக் குறைவால் காலமானார்.
இவர் மே 10ம் தேதி, 1951ம் ஆண்டு பிறந்தார். திருநெல்வேலியில் பிறந்த இவர் ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக பணியாற்றினார். இவர் அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 70க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.
விஞ்ஞானி நெல்லை முத்து திருவனந்தபுரத்தில் திடீர் உடல் நலக் குறைவால் காலமானார். மதுரையில் உள்ள அவரது மகள் வீட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.